விஜய்யுடன் கருத்து வேறுபாடு: அவர் படத்தை நான் பார்ப்பதே இல்லை: பிரபல நடிகர் பேட்டி

தளபதி விஜய் அவர்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி திரையுலகிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தான் விஜய் படத்தை பார்ப்பது இல்லை என்றும் அவருடன் நடித்த ஒரு படத்தின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அவருடைய வளர்ச்சி குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு பேட்டி கொடுத்தவர் நடிகர் நெப்போலியன் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
விஜய்யுடன் கருத்து வேறுபாடு: அவர் படத்தை நான் பார்ப்பதே இல்லை: பிரபல நடிகர் பேட்டி

தளபதி விஜய் அவர்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி திரையுலகிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தான் விஜய் படத்தை பார்ப்பது இல்லை என்றும் அவருடன் நடித்த ஒரு படத்தின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அவருடைய வளர்ச்சி குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு பேட்டி கொடுத்தவர் நடிகர் நெப்போலியன் என்பதும் குறிப்பிடத்தக்கது

விஜய் நடித்த போக்கிரி என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நெப்போலியன் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யுடன் தனக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்

அந்த படத்தை தான் பிரபுதேவாவுக்காக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யுடன் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருடன் தான் பேசுவதும் இல்லை என்றும், அவரது படங்களை பார்ப்பதும் இல்லை என்றும், எனவே அவரது வளர்ச்சி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் நடிகர் நெப்போலியன் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web