தமிழ், தெலுங்கு, இந்தி எதுவுமே தெரியாது போடா: யோகிபாபு

 

விஜய் சேதுபதி சற்று முன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றில் ’தமிழ் ஹிந்தி தெலுங்கு எதுவுமே தெரியாது போடா’ என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ’பேய்மாமா’. இந்த படத்தை பிரபல இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இறுதிக் கட்டத்திற்கு வந்து உள்ளது 

இந்த நிலையில் பேய்மாமா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ’எனக்கு தமிழ் தெலுங்கு ஹிந்தி எதுவுமே தெரியாது போடா’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா, சாந்தனு உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் ’தமிழ்தெரியாது போடா’ என்ற வாசகங்கள் கொண்ட டீசர்ட்டுகளை அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ’தமிழ் தெலுங்கு இந்தி எதுவுமே தெரியாது போடா’ என்று குறிப்பிடப்பட்டுள்ள பஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web