அந்த படத்தில் நான் நடிக்கவில்லை: அதிகாரபூர்வமாக அறிவித்த நயன்தாரா!

 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையிலும் தனது கேரக்டர் வலிமையாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சுதந்திர போராட்டத்திற்காக தமிழகத்திலிருந்து முதல் குரல் கொடுத்த பெண் வேலுநாச்சியார் என்பது அனைவரும் அறிந்ததே. வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் வேலுநாச்சியர் கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும் கூறப்பட்டது

nayantahra

ஆனால் இந்த செய்தியை நயன்தாரா தற்போது மறுத்துள்ளார். வேலுநாச்சியார் திரைப்படத்தில் தான் நடிப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார் 

இதுபோன்ற வதந்தியான செய்திகளை ஊடகங்கள் வெளியே வெளியிடவேண்டாம் என்றும் செய்திகளை தன்னிடம் அல்லது தனது தரப்பினரிடம் உறுதி செய்துவிட்டு வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் நயன்தாரா தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது


 

From around the web