சிங்கம், சாமி படங்களை இயக்கியதற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் ஹரி

சாத்தான்குளம் சம்பவம் பொதுமக்களை மட்டுமின்றி திரையுலகினர்கள் அனைவரையும் கொந்தளிக்க வைத்துவிட்டது. ரஜினி, அஜித், விஜய் தவிர கிட்டத்தட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் சாத்தான்குளம் விவகாரத்திற்காக அரசையும் காவல்துறையையும் கண்டித்து குரல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் காவல்துறையை பெருமைப்படுத்தி சாமி, சாமி 2, சிங்கம், சிங்கம் 2, மற்றும் சிங்கம் 3 ஆகிய ஐந்து திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஹரி. இந்த நிலையில் காவல்துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று இயக்குனர் ஹரி சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையில்
 

சாத்தான்குளம் சம்பவம் பொதுமக்களை மட்டுமின்றி திரையுலகினர்கள் அனைவரையும் கொந்தளிக்க வைத்துவிட்டது. ரஜினி, அஜித், விஜய் தவிர கிட்டத்தட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் சாத்தான்குளம் விவகாரத்திற்காக அரசையும் காவல்துறையையும் கண்டித்து குரல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் காவல்துறையை பெருமைப்படுத்தி சாமி, சாமி 2, சிங்கம், சிங்கம் 2, மற்றும் சிங்கம் 3 ஆகிய ஐந்து திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஹரி.

இந்த நிலையில் காவல்துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று இயக்குனர் ஹரி சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் நடந்துவிட கூடாது. இதற்கு ஒரே வழி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் அத்துமீறல் அந்த துறையையே களங்கப்படுத்தியுள்ளது!

காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்!” என்று இயக்குனர் ஹரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிங்கம், சாமி படங்களை இயக்கியதற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் ஹரி

From around the web