தலைவன் இருக்கின்றான் படத்துல நான் நடிக்கல… பூஜா குமார் விளக்கம்!!

கமலஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் எடிட்டிங்க் பணிகளும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் இரண்டு பார்ட்டுகளாக அதாவது இந்தியன் 2, இந்தியன் 3 என வெளியாகும் என்று கூறப்படுகின்றது. இந்தநிலையில் அடுத்து கமல்ஹாசன் பிக் பாஸ் 4 இல் பிசியாகி விடுவார், இடை இடையே அரசியல் பணிகளையும் செய்ய வேண்டும். இந்த நெருக்கடிகளுக்கு இடையே, கமல் அடுத்து
 
தலைவன் இருக்கின்றான் படத்துல நான் நடிக்கல… பூஜா குமார் விளக்கம்!!

கமலஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் எடிட்டிங்க் பணிகளும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் இரண்டு பார்ட்டுகளாக அதாவது இந்தியன் 2, இந்தியன் 3 என வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

இந்தநிலையில் அடுத்து கமல்ஹாசன் பிக் பாஸ் 4 இல் பிசியாகி விடுவார், இடை இடையே அரசியல் பணிகளையும் செய்ய வேண்டும். இந்த நெருக்கடிகளுக்கு இடையே, கமல் அடுத்து

தலைவன் இருக்கின்றான் திரைப்பட வேலைகளையும் துவக்கி உள்ளார்.

தலைவன் இருக்கின்றான் படத்துல நான் நடிக்கல… பூஜா குமார் விளக்கம்!!

இப்படத்தினை அவரது சொந்தத் தயாரிப்பிலேயே தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, ரேவதி, வடிவேலு ஆகியோர் நடிக்கிறார்கள். ஆனால் கதாநாயகியாக யார் நடிப்பார்கள் என்ற தகவல் மட்டும் வெளியாகவில்லை.

கடந்தவாரம் பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. இந்த செய்தி வதந்தி என பூஜா குமார் மறுத்துள்ளார்.

அவர் கூறும்போது, “தலைவன் இருக்கின்றான் படம் குறித்த பல வதந்திகள் வெளியாகின்றன அந்தப் படத்தில் நான் நடிப்பதாகக் கூறப்படுவது வெறும் வதந்தியே. இதுகுறித்து யாரும் என்னை அணுகவில்லை. ஒரு வேளை இனிமேல் அணுகினால் நான் ரொம்பவும் சந்தோஷமாக அந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

From around the web