நான் ஒரு தேவதை, குழந்தை: தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் அமலாபால்!

 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது தெரிந்ததே 

அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே செல்லும் என்பதும் அதில் சில பிகினி புகைப்படங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

amala paul

இந்த நிலையில் தற்போது அவர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் வகையில் நான் ஒரு தேவதை நான் ஒரு குழந்தை என்று பதிவு செய்துள்ளார். நான் ஒரு தேவதை, நான் விழுந்து விட்டேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். எனக்குள் எரியும் உணர்வுகள் என்னுடன் இருக்கும் பாதுகாவலரை பொறுத்தது! என்று பதிவு செய்துள்ளார்.

நடிகை அமலாபால் நடித்து முடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும், விரைவில் இந்த படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவர் தற்போது ‘லஸ்ட் ஸ்டோரி’ என்ற பாலிவுட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web