'I am a தமிழ் பேசும் Indian': யுவனின் டீ-சர்ட் வைரல்

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஹிந்தி எதிர்ப்பு கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் ஹிந்தி எதிர்ப்பு என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயமாக மாறியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் திமுக எம்பி கனிமொழி அவர்கள் சென்னை விமான நிலையத்தில் தனக்கு இந்தி தெரியாததால் விமான நிலைய ஊழியர் ஒருவரால் அவமதிக்கப்பட்டதாக கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்த நிலையில் இந்தியர்கள் என்றாலும் நாங்கள் தமிழர்கள் என்ற கொள்கையை அனைத்து தமிழர்களின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் 'I am a தமிழ் பேசும் Indian' என்ற வாசகம் அடங்கிய டீ-சர்ட் அணிந்திருந்தார்

யுவன்சங்கர் ராஜா அணிந்திருந்த டீசர்ட்டின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆதரவாகவும், இந்திக்கு எதிர்ப்பாகவும் அவரது புகைப்படத்திற்கு கமெண்ட்டுகள் பதிவாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web