நடுகாட்டில் தலைகீழாக தொங்கும் ஆண்ட்ரியா, சுற்றி வேட்டை நாய்கள்: பரபரப்பு தகவல்

 

நடுகாட்டில் நடிகை ஆண்ட்ரியா தலைகீழாக தொங்க விடப்பட்டு இருப்பதும் அவரைச் சுற்றி வேட்டை நாய்கள் வெறியுடன் காத்திருப்பது போல் இருக்கும் போஸ்டர் ஒன்று தற்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகை ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படத்தின் போஸ்டர் தான் இது என்பதும் இந்த படத்திற்கு நோ எண்ட்ரி’ என்று என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
பிரபல நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் இந்த போஸ்டர் தற்போது டுவிட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

அழகு கார்த்திக் இயக்கத்தில் அஜேஷ் இசையில் ரமேஷ் படத்தொகுப்பில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தையும் ஜாம்போ சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் ’மாஸ்டர்’ படத்தை அடுத்து ஆண்ட்ரியாவுக்கு பெரும் பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web