போர்களக் காட்சியை எப்படி எடுக்கப் போறேன்னு தெரில… மணிரத்னம் பேட்டி!!

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படமானது பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கப்பட்டு வந்தது. வெளிநாடுகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தநிலையில், கொரோனா காரணமாக அந்தந்த நாடுகள் அதன் விமானப் போக்குவரத்து சேவையினைத் தடை செய்தது. அதனால் படப்பிடிப்பினை பாதியில் நிறுத்திய நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு சொந்த ஊர் திரும்பியது. இந்தநிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேட்டியாளர் கேட்க, பொன்னியின் செலவன் போர்க்கள காட்சிகளை ஊரடங்கு முடிந்த
 
போர்களக் காட்சியை எப்படி எடுக்கப் போறேன்னு தெரில… மணிரத்னம் பேட்டி!!

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படமானது பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கப்பட்டு வந்தது. வெளிநாடுகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தநிலையில், கொரோனா காரணமாக அந்தந்த நாடுகள் அதன் விமானப் போக்குவரத்து சேவையினைத் தடை செய்தது.

அதனால் படப்பிடிப்பினை பாதியில் நிறுத்திய நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு சொந்த ஊர் திரும்பியது. இந்தநிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேட்டியாளர் கேட்க, பொன்னியின் செலவன் போர்க்கள காட்சிகளை ஊரடங்கு முடிந்த பிறகு எப்படி படமாக்க போகிறாரோ? என்று புலம்பி உள்ளார்.

போர்களக் காட்சியை எப்படி எடுக்கப் போறேன்னு தெரில… மணிரத்னம் பேட்டி!!

அவர் கூறும்போது, “கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பின்னர் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படும், அதன்பின்னர் விமானப் போக்குவரத்து சேவைகள் துவங்கப்படும். படப்பிடிப்புகள் துவங்கும் முன்னர் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொருவரும் தங்களது செலவுகளைக் குறைக்க முன் வருதல் வேண்டும்.

மேலும் அவர்களுடன் அரசும் சினிமாத் துறைக்கு உதவினால்தான், நஷ்டத்தில் இருந்து மீள முடியும். மேலும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக பிரமாண்ட போர்க்கள காட்சிகள் எடுக்கப்பட வேண்டும். அந்தக் காட்சியில் 700 பேர்  வரை பங்கேற்பார்கள். அந்தக் காட்சிகளை எப்படி படம்பிடிக்க போகிறேன் என்பது யோசனையாகவே உள்ளது. இருப்பினும் தேவைக்காக சிரத்தை எடுக்கச் செய்யவே வேண்டும்” என்று கூறியுள்ளார்.

From around the web