எஸ்பிபியின் சிகிச்சைக் கட்டணம் எவ்வளவு? மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் 

 

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு ஒரு பக்கம் திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய வைத்த நிலையில் இன்னொரு பக்கம் அவரது உடலை தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததாகவும் அவர்கள் கேட்கும் மருத்துவ கட்டணத்தை கட்டிய பின்னர் தான் உடலை தருவோம் என்று கூறியதாகவும் ஒரு வதந்தி பரவியது

இந்த வதந்தி குறித்து எஸ்பிபி சரண் அவர்கள் தனது பேஸ்புக்கில் நீண்ட விளக்கம் அளித்தார் விரைவில் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து தகுந்த விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணிக்கு மருத்துவமனை நிர்வாகம் செய்தியாளர்களை சந்தித்து எஸ்பிபி மருத்துவ கட்டணம் குறித்த வதந்திக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது மருத்துவ நிர்வாகிகளுடன் எஸ்பிபி சரண் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் வதந்திக்கு விளக்கம் ஆகியவை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

From around the web