எப்பாடா ஒருவழியா முன்ஜாமீன்  கிடைத்ததுப்பா!ஆனாலும் ரெண்டு லட்சத்தை டிடி செலுத்த நிபந்தனை!

நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
 
எப்பாடா ஒருவழியா முன்ஜாமீன் கிடைத்ததுப்பா!ஆனாலும் ரெண்டு லட்சத்தை டிடி செலுத்த நிபந்தனை!

மக்கள் மனதில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். நடிகர் விவேக் சில தினங்களுக்கு முன்பாக மாரடைப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலரும் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் வரிசையில் நடிகர் மன்சூரலிகான் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.highcourt

அப்பொழுது அவர் கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசினார். இதனால் அவர் மீது தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின்னர் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை நீக்கக் கோரியும் அவர் முன்ஜாமீன் கேட்டு இருந்தார். ஆனால் பலமுறை அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு மறுத்திருந்தது. தற்போது நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன் கிடைத்து விட்டதாக கூறப்படுகிறது.

 அதன்படி தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு தற்போது முன் ஜாமீன் கிடைத்துள்ளது. மேலும்நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பல அறிவுரைகளையும் உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். அதன்படி தடுப்பூசி குறித்து புரளி பரப்பக் கூடாது என்றும் பதற்ற நிலையை உருவாக்கக் கூடாது என்றும்உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி அறிவுறுத்தியுள்ளார். அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் மன்சூர் அலிகானுக்கு நீதிபதி தண்டபாணி அறிவுரை. தடுப்பூசி போடுவதற்கு 2 லட்சத்தை சுகாதார செயலர் டிடியாக செலுத்த மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதார பணியாளர்களின் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

From around the web