நயன்தாராவுக்கு போக வேண்டிய படம் தமன்னாவுக்கு வந்தது எப்படி?

 

பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹிட்டான அந்தாகான் என்ற திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் நிதின் இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டு முக்கிய கேரக்டரான தபு மற்றும் ராதிகா ஆப்தே நடிக்கும் வேடங்களில் நடிக்கும் நடிகைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன 

இந்த படத்தில் தபு நடித்த வேடத்தில் தமன்னாவும், ராதிகா ஆப்தே நடித்த வேடத்தில் நபா நடேஷ் என்ற நடிகையும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தயாரிப்பு தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மெகா காந்தி என்பவர் இயக்கவுள்ளார். இது இவருக்கு நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இந்த படத்தில் தபு கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது என்றும், ஆனால் நயன்தாரா ரூபாய் 5 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டதால் படக்குழுவினர் பின்வாங்கி, தற்போது ஒன்றரை கோடிக்கு தமன்னா இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஏற்கனவே தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவுக்கு இந்த படம் மிகப்பெரிய ஒரு திருப்பத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமன்னா நடிப்பில் உருவாகி ’தட் இஸ் மகாலட்சுமி என்ற திரைப்படம் தெலுங்கு திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web