நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதித்தது எப்படி? அதிர்ச்சி தகவல்!

 

கடந்த சில மாதங்களாக தமிழ் திரையுலகினர் உள்பட இந்திய திரையுலகில் உள்ள பல நட்சத்திரங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் அவர்களில் ஒருசிலர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம் 

இந்த நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரஞ்சீவி மிகுந்த பாதுகாப்புடன் கடந்த ஆறு மாதங்களாக இருந்தாலும் கடந்த மாதம் முதல் அவர் நடித்து வரும் ஆச்சாரியா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படப்பிடிப்பில் அரசு விதித்த நிபந்தனை அனைத்தையும் கடைபிடித்து வந்த போதிலும் சிரஞ்சீவிக்கு படக்குழுவினர்கள் ஒருவரிடம் இருந்து திடீரென கொரோனா வைரஸ் தொற்று பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை சிரஞ்சீவியை தனது சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்

ஆச்சாரியா படப்பிடிப்பின்போது கொரோனா தனக்கு பரவியதாகவும் இதனால் தன்னிடம் தொடர்பில் இருந்த படக்குழுவினர் மற்றும் அனைவரும்  தனிமைபடுத்திகொள்ளும்படி சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் குணமாகும் விவரங்களை அவ்வப்போது தெரிவிப்பதாகவும் அவர் ரசிகர்களுக்கு குறித்து தெரிவித்துள்ளார் 

From around the web