கார் விபத்து ஏற்பட்டது எப்படி? டுவிட்டரில் விளக்கம் அளித்த குஷ்பு!

 

நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு சென்ற கார் இன்று காலை திடீரென விபத்துக்குள்ளாகியது என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடலூரில் நடைபெற்று வரும் வேல் யாத்திரையில் பங்கு கொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று காலை குஷ்பு தனது காரில் கிளம்பி சென்றார். அவரது கார் செங்கல்பட்டு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென அந்த காரின் மீது கன்டெய்னர் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் குஷ்புவுக்கு லேசான காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிகிறது 

kushboo

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்த குஷ்பு ’நாங்கள் சென்றுகொண்டிருந்த கார் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் திடீரென கன்டெய்னர் எங்கள் காரின் மீது மோதியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கண்டைனர் டிரைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்

குஷ்புவின் மீது கன்டெய்னர் மோதியது சாதாரண விபத்தா? அல்லது திட்டமிடப்பட்ட விபத்தா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

From around the web