மூன்று படங்கள் மட்டுமே நடித்த நடிகை, 36 கோடிக்கு வீடு வாங்கியது எப்படி?

பாலிவுட் திரையுலகில் உள்ள பிரபல நடிகை ஒருவர் இதுவரை மூன்று படங்கள் மட்டுமே நடித்துள்ள நிலையில் 36 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் மேலும் 2 படங்களில் நடித்து உள்ளதால் மொத்தமே மூன்று படங்கள்தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மும்பையில் உள்ள ஒரு முக்கிய பகுதிகள் ரூபாய் 36 கோடிக்கு மூன்று மாடிகள் கொண்ட வீடு ஒன்றை ஜான்வி கபூர் வாங்கி உள்ளதாகவும் அதற்கான பத்திர செலவு மட்டும் சுமார் 78 லட்சம் என்றும் கூறப்படுகிறது. சுமார் 4000 சதுர அடி அளவில் உள்ள இந்த வீடு ஆடம்பரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர்கள் கூட சொந்த வீடு மும்பையில் வாங்க முடியாத நிலையில் மூன்று படங்களில் நடித்த ஜான்வி கபூர் எப்படி இவ்வளவு பெரிய தொகைக்கு வீடு வாங்கினார் என்ற கேள்வி பாலிவுட் திரையுலகில் எழுந்துள்ளது. இருப்பினும் ஜான்வி கபூரின் தந்தை மிகப் பெரிய கோடீஸ்வரர் என்பதால் அவர் பணம் கொடுத்து உதவி இருக்கலாம் என்றும் ஜான்வி கபூர் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
இருப்பினும் மூன்று படங்கள் மட்டுமே நடித்த ஜான்வி கபூர் 36 கோடிக்கு வீடு வாங்கியுள்ள செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது