பிக்பாஸ் நாமினேஷனில் இருந்து சுரேஷ் தப்பியது எப்படி?

 

பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. முதல் வாரம் எவிக்சன் இல்லை என்பதால் நாமினேஷன் படலமும் இல்லாமல் இருந்தது 

ஆனால் இந்த வாரம் எவிக்சன் உண்டு என்பதால் இந்த வார நாமினேஷனில் ஏழு பேர் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த நாமினேஷன் படலத்தில் சனம்ஷெட்டியை மொத்தம் 11 பேர் நாமினேஷன் செய்தனர். அதற்கு அடுத்ததாக ஷிவானியும், சம்யூக்தாவும் அதிகமானவர்களால் நாமினேஷன் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரில்லா மற்றும் ஆஜித் ஆகிய ஏழு பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் சக்கரவர்த்தி நாமினேஷன் பட்டியலில் இருந்தாலும், அவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதால் அவரது பெயர் நாமினேஷன் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரில்லா மற்றும் ஆஜித் ஆகிய ஏழு பேர்களில் இந்த வாரம் சனி அல்லது ஞாயிறு அன்று ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த வாக்குகளை பெற ஒரு அடிப்படையில் அனேகமாக ரேகா அல்லது சனம்ஷெட்டி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web