கதவை உடைத்த ரியோ, திடீரென சமாதானம் ஆனது எப்படி?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாலாஜி மீது உள்ள கோபம் காரணமாக கதவை உதைத்துத் தள்ளிய ரியோ, அடுத்த ஒரு சில நிமிடங்களில் திடீரென பாலாஜியுடன் சமரசம் செய்துகொண்டார் 
நேற்றைய நிகழ்ச்சியில் தன்னை காதல் கண்ணை மறைக்குது என்று குற்றம் சாட்டியதால் டென்ஷனான பாலாஜி ஒரு சில வார்த்தைகளை விட்டார். இதனால் அதிக கோபப்பட்ட ரியோ, சக போட்டியாளர்களுடன் பாலாஜி குறித்து குற்றம் கூறினார் 

அதுமட்டுமின்றி பாலாஜியும் ஷிவானியும் பேசிக் கொண்டு சென்ற போது அருகிலுள்ள கதவை உடைத்து விட்டு அவர் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீரென பாலாஜி மற்றும் ரியோ ஆகிய இருவரும் சமரசமாக பேசி கொண்டனர்

rio balaji

காதைக் கிழித்து விடுவேன் என்று நீ கூறியதாக நான் தவறாக நினைத்துவிட்டேன் என்றும் அதற்காக நான் வருத்தப்படுகிறேன் என்று ரியோ திடீரென மன்னிப்பு கேட்டதை அடுத்து பாலாஜியும் இந்த விஷயத்தை முடித்துக் கொள்வதாக கூறினார். எனவே பாலாஜி மற்றும் ரியோ இடையே பிக்பாஸ் கொளுத்தி போட்ட பிரச்சனை பிரம்மாண்டமாக இருக்கும் என்று கருதப்பட்ட சண்டை திடீரென சமாதானமாக மாறியது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது

From around the web