ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் அடுத்த தகவல்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாகவே அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் ஒரு தகவலை தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், அவரது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்ந்து அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

rajini

மேலும் ரஜினியை சந்திக்க தயவு செய்து யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றும் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், ரஜினியின் மகள் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டு இருப்பதால் அவரை பற்றிய கவலை எதுவும் தேவை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ரஜினிக்கு தேவையான சிகிச்சைகளை சிறப்புடன் செய்யுமாறு தெலுங்கானா மாநில கவர்னர் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web