பாடகர் எஸ்பிபி கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வந்ததால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சி அடைந்தது. ஆனால் அதனை அடுத்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வெளிவந்தது என்பதும் இதனை அவரது மகன் எஸ்பிபி சரண் உறுதி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன்னர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த
 

பாடகர் எஸ்பிபி கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வந்ததால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சி அடைந்தது. ஆனால் அதனை அடுத்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வெளிவந்தது என்பதும் இதனை அவரது மகன் எஸ்பிபி சரண் உறுதி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் எஸ்பிபி உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிக்கையால் தற்போது மீண்டும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று கோடிக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடம் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது

பாடகர் எஸ்பிபி கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு

From around the web