த்ரிஷாவுக்கு திடீரென வந்த குதிரைப்பாசம்!

 

த்ரிஷாவுக்கு விலங்குகள் மீது அலாதி பிரியம் என்பதும் அவர் ஒரு பீட்டா அமைப்பின் ஆதரவாளர் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் தனது வீட்டில் விதவிதமான நாய்க்குட்டிகள் உள்பட வீட்டு விலங்குகளை வளர்த்து வரும் த்ரிஷாவுக்கு திடீரென குதிரை மீது பாசம் எழுந்து உள்ளது. த்ரிஷா கடந்த சில மாதங்களாக குதிரை சவாரி பயிற்சி பெற்று வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் த்ரிஷா, குதிரையுடன் அவர் இருக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டரிலும் இன்ஸ்டாவிலும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் பின்னணியிலும் ஒருசில குதிரைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 


இந்த நிலையில் திடீரென குதிரைமீது த்ரிஷாவுக்கு பாசம் ஏற்பட்டது ஏன் என்று விசாரித்தபோது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் த்ரிஷா, அந்த படத்திற்காக தான் குதிரை சவாரியை பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் த்ரிஷாவுக்கு திடீரென குதிரை மீது பாசம் ஏற்பட மணிரத்னமே காரணம் என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது

From around the web