விவேக் மரணம் பற்றி அறிந்ததும் வேதனை உற்றேன் உள்துறை அமைச்சர்!

நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து அறிந்ததும் வேதனை உற்றேன் என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா!
 
விவேக் மரணம் பற்றி அறிந்ததும் வேதனை உற்றேன் உள்துறை அமைச்சர்!

 தனது நடிப்பாலும் தனது திறமையாலும் மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக்,  பொதுவாக இவரின் காமெடிகள் அனைத்தும் சமூக கருத்துக்களை கவனமாக காணப்பட்டு வரும். இந்நிலையில் அவர் இன்றைய தினம் அதிகாலையில் மரணமடைந்து சினிமா துறையில் மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் தற்போது அவருக்கு பிரபலங்கள் நடிகர்கள் ரசிகர்கள் என அனைவரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் அவரின் உடலானது தற்போது தகனம் செய்யப்பட்டது.

vivek

மேலும் அவருக்கு போலீஸ் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை யுடன் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.  மேலும் அவருக்கு அஞ்சலி செலுத்திய பலரும்  செய்தியாளர்களிடம் சந்தித்து அவருடன் இருந்த தருணங்களையும் பணியாற்றிய நிமிடங்களையும் பற்றி பகிர்ந்தனர்.மேலும் அரசியல் கட்சியினர் பலரும் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.மேலும் இன்று காலை பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நடிகர் விவேக்குக்கு இரங்கலை தெரிவித்துள்ளார் .அதன்படி அவர் கூறியுள்ளார் நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து உடனே வேதனை உற்றேன் என்றும் அவர் கூறினார். மேலும் விவேக் நடிப்பின் அற்புதமான திறமை அவர் மிகச் சிறந்த  நடிகர் ஆக்கியது உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

From around the web