டிரம்ப்பின் செயல் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள ஹாலிவுட் நடிகர்!!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் துவக்கினர். ட்ரம்ப் போராட்டத்தை நிறுத்தவில்லை எனில், ராணுவத்தைப் பயன்படுத்துவேன் என்று கூறியதை அடுத்தும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தநிலையில்
 
டிரம்ப்பின் செயல் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள ஹாலிவுட் நடிகர்!!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் துவக்கினர்.  ட்ரம்ப் போராட்டத்தை நிறுத்தவில்லை எனில், ராணுவத்தைப் பயன்படுத்துவேன் என்று கூறியதை அடுத்தும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

டிரம்ப்பின் செயல் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள ஹாலிவுட் நடிகர்!!

இந்தநிலையில் உலகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் பலரும் கருப்பு இனத்தவர்களுக்கு ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் ஹாலிவுட் நடிகரான ஜான்சன், ட்விட்டரில் ஒரு வீடியோவினை வெளியிட்டு ட்ரம்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.  அதாவது ஜான்சன் வீடியோவில், “நம் நாட்டில் உள்ள மக்கள் பிளாய்டுக்கு நிகழ்ந்த சம்பவத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் விரக்தியில் கெஞ்சி வருகிறார்கள்.

இதுபோன்ற நேரத்தில் மக்களின் தலைவராகிய நீங்கள் எங்கே போனீர்கள்? இந்த நேரத்தில் அவர்கள் விரும்புவது, நாட்டில் அமைதியை நான் காப்பேன், உங்களுக்கான நீதியினை நிச்சயம் கொடுப்பேன் என்று நீங்கள் சொல்லும் வார்த்தைகளைத்தான்” என்று கூறியுள்ளார். ஆனால் அந்த வீடியோவில் அவர் கடைசிவரை ட்ரம்ப் பெயரைக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web