ஹாலிவுட் படம்: உறுதி செய்த தனுஷ் அறிக்கை!

 

கோலிவுட், பாலிவுட் என தொடர்ச்சியாக பிசியாக இருந்து கொண்டிருக்கும் தனுஷ் தற்போது ஹாலிவுட் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் இயக்கும் அடுத்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்காக தயாராகி வருகிறது. இந்த படத்தில் தனுஷ் உள்பட 4 முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

dhanush

இதனை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் இயக்கத்தில் தான் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன் என்றும், இந்த படத்தில் நடிப்பது எனக்கு நிச்சயம் ஒரு அபூர்வமான அனுபவமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் தனக்கு மீண்டும் ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த தனுஷின் இந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது

From around the web