பாக்யராஜூக்கே தெரியாமல் டப்பிங் செய்யப்பட்ட அவரது சூப்பர் ஹிட் திரைப்படம்!

 

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய திரைப்படம் ஒன்று அவருக்கே தெரியாமல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு உள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவுக்கு கே பாக்யராஜ் சமீபத்தில் வீடியோ ஒன்றில் இரங்கல் தெரிவித்தார். அப்போது அவர் தன்னுடைய ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்ற திரைப்படத்தை தனக்கே தெரியாமல் தனது மனைவியை பிரவீனா தெலுங்கில் டப் செய்தார் என்றும் தனது கேரக்டருக்கு தெலுங்கில் குரல் கொடுத்தவர் எஸ்பி பாலசுப்ரமணியம் என்றும் கூறினார் 

இந்த விஷயம் தனக்கு தெரியாது என்றும் ஒருநாள் சர்ப்ரைசாக தனது மனைவி தன்னை டப்பிங் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அந்த படத்தை போட்டுக் காட்டியபோது நான் ஆச்சரியப்பட்டேன் என்றும் அதிலும் குறிப்பாக எனக்காக எஸ்பிபி அவர்கள் குரல் கொடுத்து இருந்ததை அறிந்து மிகுந்த சந்தோசப்பட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார் 

மேலும் தனது முதல் படமான ’நீ சிரித்தால் நான் சிரிப்பேன்’ என்ற படத்திற்கு எஸ்பிபி ஒரு பாடலை பாடினார் என்றும் கே பாக்யராஜ் தனது நினைவலைகளை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது


 

From around the web