மலையாள நடிகருடன் இணையும் இந்தி நடிகை...!

நடிகை டயானா பெண்டியுடன் இணைந்து நடிக்கும் பிரபல மலையாள நடிகர்...!
 
நடிகை டயானா பெண்டியின்  ட்விட்டர் பக்கம் கூறும் தகவல்.....,

நடிகை "டயானா பெண்டி" மும்பையில் பிறந்தார். பின்னர் இவர் ஆரம்ப நாட்களில் "மாடலிங் துறையில்" பணியாற்றினார் .பின்னர் இந்தி சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். "டான்", "பாம்பே டாக்கீஸ்" போன்ற பல திரைப்படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வெளியானது. குறிப்பாக இவரது நடிப்பில் வெளியாகி இருந்த "தூம்"  திரைப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது.  மேலும் இவரது நடிப்பில் வெளியாகிய "தூம்3" என்ற திரைப்படமும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

diana penty


தற்போது இவர் தென்னிந்திய பக்கமாக தனது பயணத்தை திருப்பியுள்ளார். இவர் பிரபல மலையாள நடிகர்" துல்கர் சல்மானுடன்" இணைந்து நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் மலையாள முன்னணி நடிகர் " மம்முட்டியின்" மகனாவார்.மேலும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி இருந்த "சார்லி" என்ற திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வேற லெவலாக  ஓடியது. மேலும் நடிகர் துல்கரின் நடிப்பில் வெளியாகி இருந்த "பெங்களூர் டேஸ்" திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

 மேலும் நடிகர் துல்கர் சல்மான் தமிழில் "ஓ காதல் கண்மணி", "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" போன்றத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படங்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது தற்போது நடிகை டயானா பெண்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தான்  நடிகர் துல்கருடன்  இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனைக் காணும்போது நடிகை டயானா, நடிகர் துல்கர் சல்மானுடன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது . இதனால் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை டயானா பெண்டியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இத்திரைப்படம் நடிகை டயானா பெண்டியின் முதல் மலையாள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web