நான்காவது முறையாக தனுஷூடன் இணையும் ஹீரோ!

 

தனுஷ் நடிக்க இருக்கும் 43வது திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார் என்பதும் ஜீவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் தனுஷுடன் சமுத்திரகனி இணைந்துள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது 

dhanush samuthirakani2

ஏற்கனவே விஐபி, விஐபி-2 மற்றும் வட சென்னை ஆகிய 3 படங்களில் தனுஷுடன் சமுத்திரகனி இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது நான்காவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஐபி மற்றும் விஐபி 2 படங்களில் நடித்ததில் போலவே இந்த படத்திலும் தனுஷுக்கு அப்பாவாக தான் சமுத்திரகனி நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும்  தனுஷின் ஓப்பனிங் பாடல் காட்சி இன்று படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ்  தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web