வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு இதோ புதிய அப்டேட்

 

கொரோனா வைரஸ் காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பில் கடந்த ஆறு மாதங்களாக நின்று இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது என்பதும், தல அஜீத் சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே

அஜித், வேலையில் இறங்கிவிட்டால் நல்ல நாள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அந்த வகையில் தீபாவளி அன்று கூட அவர் சென்னை திரும்பமால், படப்பிடிப்பு தளத்திலேயே இருந்து படக்குழுவினர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த்கவும் தகவல்கள் வெளிவந்தன

valimai

தீபாவளிக்கு விடுமுறை அளிக்கலாம் என்று இயக்குனர் கூறியபோதும், அதெல்லாம் வேண்டாம், படப்பிடிப்பை முடித்துவிட்டே சென்னை செல்வதாக அஜித் கூறியதாக கூறிவிட்டாராம். அதனால் தீபாவளி கொண்டாடமல் படக்குழுவினர் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஐதராபாத் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாகவும், இதனை அடுத்து அஜித் சென்னை திரும்பி உள்ளதாகவும் தெரிகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்ற நிலையில் அஜீத் இதுவரை இல்லாத அளவில் மிகவும் ரிஸ்க் எடுத்து ஆர்வமாக நடித்து வருவதாகவும் இந்த படம் ரசிகர்களுக்கு சரியான ஒரு ஆக்ஷன் விருந்தாக இருக்க வேண்டும் என்பதில் அஜித் முழு கவனத்துடன் நடிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்

மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், டிரைலர் உள்பட அனைத்தும் அடுத்தடுத்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள்னர்.

From around the web