இதோ வந்துட்டேன் நாளைக்கு..!

சில மாதங்களுக்கு முன் "கேர் ஆப் காதல்" என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது. சமீப காலமாக நிலவிவரும் கொரோனா அச்சத்தால் இத்திரைப்படம் வெளியாகாமல் காலதாமதம் காத்துக்கொண்டிருந்தது. பொங்கலில் இருந்து திரையரங்கள் திறக்கப்படும் என அறிவித்த நிலையில் நடிகர் விஜய் நடித்திருந்த "மாஸ்டர்" திரைப்படம் திரையில் வெளியாகியது. மேலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி அத்திரைப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இதனால் "கேர் ஆப் காதல்" திரைப்படமானது நாளை பிப்ரவரி 12ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பல புதிய அறிமுகம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் ஒரு மாறுபட்ட காதல் கதையாக இருக்கும் என மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தினை"ஹேமம்மர் ஜாஸ்தி" என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் "ஸ்வீக்கர் அகஸ்தி" இசையில் உருவாகி உள்ளது.
தற்போது திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்த நிலையில் இத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இத்திரைப்படத்தில் நடித்துள்ள அறிமுக நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.