ஹேமந்த் மோசடி வழக்கு!.. சித்ராவிற்கு நியாயம் கிடைக்குமா?

சென்னை கமிஷ்னர் ஆப் போலீஸ் மகேஷ் குமார் அகர்வால், சித்ரா தற்கொலை மற்றும் ஹேமந்த் மோசடி வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளார்
 

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சித்ரா. அந்த சீரியலை இவருக்காகவே பலர் பார்த்தார்கள் என்றே கூறலாம்.

மிகவும் தைரியமான பெண்ணான இவர் தற்கொலை செய்துகொண்டது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவரது தற்கொலைக்கான காரணமும் இன்னும் வெளியே வரவில்லை.

கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ஹேமந்த் செய்த பண மோசடி குறித்து அண்மையில் தான் வெளியே வந்துள்ளது.

இதனால் சென்னை கமிஷ்னர் ஆப் போலீஸ் மகேஷ் குமார் அகர்வால், சித்ரா தற்கொலை மற்றும் ஹேமந்த் மோசடி வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளார். வரும் நாட்களில் சித்ரா தற்கொலை குறித்தும் உண்மை தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது,

From around the web