அன்னவாசல் திட்டத்திற்கு உதவி… சூர்யாவுக்கு நன்றி சொன்ன எம்பி வெங்கடேசன்!!

கொரோனா வைரஸ் உலகில் 200 நாடுகளுக்கும் மேல் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகமாகாமல் இருக்க நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏறக்குறைய 2 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழை எளிய மக்கள், அன்றாடம் காய்ச்சிகள், ஆதரவற்றோர் எனப் பலரும் உணவின்றித் தவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு முன்னணி நடிகர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். யாருக்கு இல்லையென்றாலும் ஓடோடி உதவி செய்பவர்
 
அன்னவாசல் திட்டத்திற்கு உதவி… சூர்யாவுக்கு நன்றி சொன்ன எம்பி வெங்கடேசன்!!

கொரோனா வைரஸ் உலகில் 200 நாடுகளுக்கும் மேல் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகமாகாமல் இருக்க நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏறக்குறைய 2 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழை எளிய மக்கள், அன்றாடம் காய்ச்சிகள், ஆதரவற்றோர் எனப் பலரும் உணவின்றித் தவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு முன்னணி நடிகர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அன்னவாசல் திட்டத்திற்கு உதவி… சூர்யாவுக்கு நன்றி சொன்ன எம்பி வெங்கடேசன்!!

யாருக்கு இல்லையென்றாலும் ஓடோடி உதவி செய்பவர் நடிகர் சூர்யா, பொதுப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக பொதுமக்களுக்கு ஆதரவாக இருப்பவரும் அவரே ஆவார். சமீபத்தில் பெப்சி தொழிலாளர்களுக்கு பணம் வசூலித்தபோது பலரும் உதவிகளை வழங்கத் தயங்கிய நிலையில் சூர்யா முதல் ஆளாய் நிதியுதவி வழங்கினார்.

தற்போது மீண்டும் மதுரை அன்னவாசல் திட்டத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட எம்பி வெங்கடேசன் சூர்யாவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

சூர்யா ஏழை, எளிய மாணவர்களுக்கு உணவு, உடை, கல்வி போன்றவற்றினை தனது அகரம் அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார், அதேபோல் அவரது தம்பி கார்த்தி உழவன் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web