‘செக்க சிவந்த வானம்’ ரிலீஸில் சிக்கலா?

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தாசாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய் ஆகிய நான்கு ஹீரோக்கள் நடித்த ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படம் வரும் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் தடையில்லா சான்று வழங்காததால் படம் குறித்த தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நாய்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், இந்த காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதால் இப்படத்திற்கு தடையில்லா சான்று வழங்க முடியாது என விலங்குகள்
 

‘செக்க சிவந்த வானம்’ ரிலீஸில் சிக்கலா?

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தாசாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய் ஆகிய நான்கு ஹீரோக்கள் நடித்த ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படம் வரும் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் தடையில்லா சான்று வழங்காததால் படம் குறித்த தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் நாய்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், இந்த காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதால் இப்படத்திற்கு தடையில்லா சான்று வழங்க முடியாது என விலங்குகள் நலவாரியம் தொிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விலங்குகள் நல வாரியம் என்.ஓ.சி வழங்க மறுத்திருப்பதால் இந்த காட்சிகளை வெட்டிவிடலாமா? என்று படக்குழுவினர் யோசித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

‘செக்க சிவந்த வானம்’ ரிலீஸில் சிக்கலா?ஏற்கனவே இதேபோன்ற ஒருசில காரணங்களால் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சண்டகோழி 2 மற்றும் ஜோதிகாவின் காற்றின் மொழி ஆகிய படங்களுக்கும் விலங்குகள் நல வாரியம் என்.ஓ.சி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

From around the web