பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களின் வாரிசுகள்: கமல் சிபாரிசு செய்ததாக தகவல்

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்தன என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இரண்டு பிரபலங்களின் வாரிசுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்களை கமல்ஹாசனே சிபாரிசு செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

பிரபல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர். இவர் விஜய் சேதுபதி திரிஷா நடித்த ’96’ படத்தில், இளம் விஜய் சேதுபதி ஆக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது 

அதேபோல் பிரபல நடிகர் நாசரின் மகன் அபுஹாசன். இவர் கடாரம் கொண்டான் படத்தில் அக்ஷரா ஹாசன் ஜோடியாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் என கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது 

எம்எஸ் பாஸ்கர் மற்றும் நாசர் ஆகிய இருவரும் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் அவர்களுடைய வாரிசுகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜய் டிவியிடம் கமல் சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது

From around the web