ஒரே ஒரு டுவிட்டுக்கே அனல் பறக்கும்: 50 வீடியோ வெளியிடுகிறாரா ரஜினி?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரே ஒரு ட்வீட் போட்டாலே சமூக வலைதளங்களில் அனல்கிளப்பும் என்பது தெரிந்ததே. அந்த டுவிட்டிற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிரொலிப்பார்கள் என்பதும், இரண்டு நாட்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டில் இருக்கும் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் ஐம்பது பிரச்சார வீடியோக்களை தயாரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இதன் முதல் வீடியோவை அவர் வரும் விஜயதசமி அன்று வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வாரம் ஒரு வீடியோ என்ற வகையில் ரஜினியின் பிரச்சார வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஒரே ஒரு டுவீட்டிற்கு அதிர்ச்சியாகி வரும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக ரஜினி 50 வீடியோக்களை வெளியிடவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web