நெஞ்சை தட்டி நியாயம் கேட்கிற படம்: சூர்யாவின் பாராட்டு எந்த படத்திற்கு?

 

நடிகர் சூர்யா தரமான திரைப்படங்கள் வெளியாகும் போது அந்த படத்தின் படக்குழுவினருக்கு தனது டுவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவிப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார். பெரும்பாலும் அவர் சின்ன பட்ஜெட் படங்களை ஊக்கப்படுத்தி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இயக்குனர் விருமாண்டி இயக்கிய முதல் திரைப்படமான க/பெ ரணசிங்கம் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானதை அடுத்து அந்தப் படம் தற்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது 

இதுவரை ஓட்டிகள் வெளியான அனைத்து படங்களும் தோல்வி அடைந்த நிலையில் க/பெ ரணசிங்கம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ஒரு ஆரோக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது 
இந்த நிலையில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி அதே ஓடிடியில் தனது சூரரைப்போற்று படத்தை ரிலீஸ் செய்ய உள்ள சூர்யா, க/பெ ரணசிங்கம் படத்தின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: 

அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் ’க/பெ ரணசிங்கம்’. இயக்குனர் விருமாண்டி, விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜிப்ரான், மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.


 

From around the web