சிம்புவின் அடுத்த பட டைட்டிலில் ‘தல’: ஆச்சரிய தகவல்

 

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 20வது திரைப் படமான இந்த படத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளிவரவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தின் டைட்டிலில் ’தல’ என்ற வார்த்தை இருப்பதாக கூறப்படுகிறது. டைட்டிலின் முன்பக்கம் அல்லது பின்பக்கத்தில் தல என்ற வார்த்தை கண்டிப்பாக இந்த டைட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது 

simbu

ஏற்கனவே தல அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பதால் டைட்டிலிலேயே தல பெயரில் வைக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தில் ரெஃப்ரன்ஸ் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முப்தி என்ற கன்னட படத்தின் ரீமேக் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web