அட ஆக்டரும் இவர்தானாம் மியூசிக் டைரக்டரும் இவர்தானாம்..!

"நடிகர்", "இசையமைப்பாளர்" என இரு முகங்களை கொண்டவர் நடிகர் "ஜி.வி. பிரகாஷ்". இவரின் இசையில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் "அசுரன்". மேலும் இவர் தளபதி விஜயின் "தெறி"படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜயின் "தலைவா "என்ற படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"இயக்குனர் பாலா" இயக்கத்தில் ஈட்டி பட நாயகனான "அதர்வா" நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் "பரதேசி". இத்திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்,"நடிகர் விக்ரமின்" நடிப்பில் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்த திரைப்படமான "தெய்வத்திருமகள்" என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக வலம் வந்தார். அவரது நடிப்பில் வெளியாகிய "டார்லிங்" திரைப்படம் இவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதற்குப் பின்னர் "கடவுள் இருக்கான் குமாரு", "செம", "த்ரிஷா இல்லனா நயன்தாரா" போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "பேச்சிலர்". இத்திரைப்படத்தின் டீசர் இந்த மாதம் 13ம் தேதி வெளியாகும் என ராஜசேகர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் வெளியிடும் தேதியை குறிக்கும் போஸ்டர் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.
#Bachelor teaser will be out on Feb 13 @ 7 PM.@gvprakash @Dili_AFF @Axessfilm @dir_Sathish @thenieswar @Sanlokesh @divyabarti2801 @k_pooranesh @gopiprasannaa @DoneChannel1 @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/NbGIlpjbfM
— Rajasekar (@sekartweets) February 12, 2021