மனம் மாறி மன்னிப்பு கேட்டாரா? எல்லாம் நடிப்பா? பாலாஜி வீடியோ

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவரிடையே சண்டைகள் முட்டி மோதிக்கொண்டு இருந்தன என்பதும் நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பாலாஜியை வறுத்து எடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோ வீடியோவில் பாலாஜி தனது செயலுக்கு தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் காட்சிகள் உள்ளன. அதில் தனக்கு சின்ன வயதிலிருந்தே நல்லது கெட்டது எடுத்துச் சொல்வதற்கு ஆள் யாரும் இல்லை என்றும் அதிகமாகக் கோபப்படுவது தனது இயல்பு என்றும் ஆனால் அதே நேரத்தில் தனது தவறை யாராவது எடுத்து சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொள்வேன் என்றும் அவர் வருத்தத்துடன் கண்ணீருடன் கூறுகிறார் 

balaji apology

இதனையடுத்து அவரை கமலஹாசன் பாராட்டுவதோடு இந்த வீடியோ முடிவுக்கு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இதற்கு முன்னர் பல முறை கமல்ஹாசன் பாலாஜிக்கு அறிவுரை கூறியுள்ளார். அந்த அறிவுரைகளை ஏற்று பாலாஜி திருந்தி கொண்டிருந்த நேரத்தில் திடீரென அவருடைய சகோதரரின் வரவு தான் அவரை முற்றிலும் மாற்றி விட்டதாக கூறப்படுகிறது 

தற்போது கமல்ஹாசன் மீண்டும் அறிவுரை கூறிய நிலையில் அடுத்து வரும் இரண்டு வாரங்களில் அவர் சரியாக விளையாடுவாரா? அல்லது மீண்டும் கோபப்படுவாரா?  மீண்டும் கோபப்பட்டு மீண்டும் மன்னிப்பு கேட்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


 

From around the web