வேல்முருகன் வெளியேறிவிட்டாரா? பிக்பாஸ் பரபரப்பு!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 27வது நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அல்லது நாளை போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. சனம்ஷெட்டி, ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேர்கள் நாமினேஷன் சிக்கி உள்ளனர் என்பதும், இவர்களில் குறைந்த வாக்குகள் மக்களிடம் பெற்றவர்கள் வெளியேற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ரியோ, ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகிய 5 பேர் அதிக வாக்குகளை பெற்று இருப்பதால் இவர்கள் இன்று காப்பாற்றப்படுகிறார்கள் என்று கமல்ஹாசன் மூலம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

எனவே மீதி உள்ள சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், வேல்முருகன் ஆகிய 6 பேர்களில் வேல்முருகன் இன்று வெளியேறுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. ஆன்லைன் மூலம் பார்வையாளர்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பதிவு செய்த டுவீட்டிலிருந்து வேல்முருகன் இந்த வாரம் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது 

இந்த போட்டியே வேல்முருகனுக்கு செட் ஆகவில்லை என்றும் அவர் ஒரு சில இடங்களில் சுவராசியமாக பாடுவதைத் தவிர டாஸ்க் உள்பட எதையும் அவர் உருப்படியாக செய்யவில்லை என்றும் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது. எனவே அவர் வெளியேற்றப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் அடுத்தடுத்த வாரங்களில் ஆஜித், ஆரி, சோம்சேகர் உள்பட ஒருசில வெளியேற்றப்படுவார்கள் என்றும், சுசித்ரா உள்பட ஒரு சிலர் உள்ளே வரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

From around the web