துபாயில் இருந்து இன்னும் வரவில்லையா தல தோனி? வைரலாகும் புகைப்படம்

 

நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை தான் பிளே ஆப் சுற்றுக்கு கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

எனவே ஐபிஎல் போட்டி முடிவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நாடு திரும்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனால் அதே நேரத்தில் தல தோனி மட்டும் தன்னுடைய குடும்பத்தினருடன் இன்னும் துபாயில் தான் இருப்பதாக தெரிகிறது. துபாயில் அவர் குடும்பத்தினருடன் சுற்றுலா பகுதிகளில் சுற்றி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது 

இந்த நிலையில் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தல தோனியின் மகள் ஜீவா உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் சற்றுமுன் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது 

துபாயிலேயே மிக உயர்ந்த மிக காஸ்ட்லியான ஹோட்டலில்தான் தல தோனி தங்கியிருப்பதாகவும் தல தோனியின் மகள் ஜிவாவின் புகைப்படம் அந்த ஓட்டலில் தான் எடுக்கப்பட்டது என்றும் இந்த புகைப்படத்திற்கு தல ரசிகர்களும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

இன்னும் ஒரு சில நாட்கள் துபாயில் மகிழ்ச்சியோடு தனது குடும்பத்துடன் தல தோனி இருப்பார் என்றும் அதன் பின்னரே அவர் நாடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web