ஆரி பைனலுக்கு போய்விட்டாரா? பரபரப்பு தகவல்

 

பிக்பாஸ் வீட்டில் நேற்று அடுத்த வார கேப்டனுக்கு வைக்கப்பட்ட டாஸ்க்கில் ஆரி மிகவும் திறமையாக விளையாடி வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. சோம் மற்றும் ரம்யா ஆகிய இருவரில் ஒருவர் வெற்றி பெற வேண்டும் என பாலாஜி உள்பட ஒரு சில எதிர் பார்த்திருந்த போதிலும் தனது சுறுசுறுப்பான விளையாட்டு திறமையால் வெற்றி பெற்று அடுத்த வாரம் கேப்டனாக ஆரி தேர்வு செய்யப்பட்டுள்ளார் 

அடுத்த வார கேப்டன் ஆரி என்பதால் அடுத்த வாரம் நாமினேஷன் அவர் இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 2 வாரம் மட்டுமே உள்ளது என்பதும் மூன்றாவது வாரம் பைனல் என்பதால் ஆரி கிட்டத்தட்ட இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டதாகவே கருதப்படுகிறது

ramya

அடுத்த வாரம் இல்லாமல் அதற்கு அடுத்த வாரம் ஆரி நாமினேசன் செய்யப்படாமலோ அல்லது நாமினேஷன் செய்யப்பட்டாலும் தப்பித்து விட்டாலும் அவர் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் நால்வரில் ஒருவராக இருப்பார் என்பது உறுதி செய்யப்படுகிறது

பார்வையாளர்களின் கணிப்பின்படி ஆரி, பாலா, ரியோ மற்றும் ரம்யா ஆகிய நால்வர் தான் இறுதிப்போட்டிக்கு வருவார்கள் என்றும் ஆரி டைட்டில் பட்டம் வெல்வார் என்றும் ரியோ அல்லது ரம்யா ரன்னர் ஆக வருவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது

From around the web