ஹரிஷ் கல்யாண்-ப்ரியாபவானி சங்கர் காதல்: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு

 

நேற்று மாலை முதல் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் காதலிப்பதாகவும் இது குறித்த புகைப்படங்கள் அவர்களுடைய சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன 

ஆனால் உண்மையில் சூப்பர் ஹிட்டான தெலுங்கு திரைப்படம் ஒன்றின் தமிழ் ரீமேக் திரைப் படத்தில் இருவரும் நடித்தி வருகின்றார்கள் என்பதும் இந்த படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 
இந்த படத்தின் புரமோஷனுக்காக தான் பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யான் ஆகிய இருவரும் மாறி மாறி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

ஏற்கனவே ப்ரியா பவானிசங்கர் தனது கல்லூரி கால நண்பரை காதலித்து வருகிறார் என்பதும், அவரை ப்ரியா விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web