பன்முக கலைஞருக்கு "ஹாப்பி பர்த்டே"!

ஆரம்ப காலத்தில் பாடகராக இருந்து இன்று மிகப்பெரிய கதாநாயகனாக இருப்பவர் "நடிகர் ஆதி". நடிகர் ஆதி நடிப்பில் வெளியாகிய "மீசைய முறுக்கு" என்ற திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தில் இவருடன் "ஆத்மிகா" ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின்னர் இவர் நடிப்பில் வெளியாகிய "நட்பே துணை"," நான் சிரித்தால்" போன்ற திரைப்படங்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மேலும் இவர் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நடிகர் ஜெயம் ரவியின் திரைப்படமான "தனி ஒருவன்" திரைப்படத்திற்கு இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகிய "ஆம்பள" என்ற திரைப்படத்திற்கும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இத்திரைப்படத்தில் "நடிகை ரம்யா கிருஷ்ணன்"," நடிகர் சதீஷ்"," நடிகர் பிரபு" ,"நடிகை ஹன்சிகா" போன்ற பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது.
மேலும் இவர் "கலகலப்பு-2"," கவண்" போன்ற பல படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடுகிறார் நடிகர் ஹிப் ஹாப் ஆதி .இன்று பிறந்தநாள் காணும் இவருக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.