பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு சகோ … ஹர்பஜன் சிங்கின் ட்வீட்!!

1998 ஆம் ஆண்டு இந்திய அணிக்கான சர்வதேசப் போட்டியில் களமிறங்கிய ஹர்பஜன், இந்திய அணியின் வெற்றிக்கு பல முறை வித்திட்டுச் சென்றவர், பாஜ்ஜி என செல்லமாக அழைக்கப்படும் இவர், 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். விளையாட்டினைத் தாண்டி ரசிகர்களுடன் எப்போதும் இணைப்பில் இருந்துவரும் இவர் தற்போது தனது பணியினை சினிமாத் துறையில் செய்ய முடிவெடுத்து தமிழ் சினிமா மூலம் களமிறங்கியுள்ளார். அதாவது ஜான் பால்ராஜ் இயக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின்மூலம் திரையில் தோன்றவுள்ளார்.
 
பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு சகோ … ஹர்பஜன் சிங்கின் ட்வீட்!!

1998 ஆம் ஆண்டு இந்திய அணிக்கான சர்வதேசப் போட்டியில் களமிறங்கிய ஹர்பஜன், இந்திய அணியின் வெற்றிக்கு பல முறை வித்திட்டுச் சென்றவர், பாஜ்ஜி என செல்லமாக அழைக்கப்படும் இவர், 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

விளையாட்டினைத் தாண்டி ரசிகர்களுடன் எப்போதும் இணைப்பில் இருந்துவரும் இவர் தற்போது தனது பணியினை சினிமாத் துறையில் செய்ய முடிவெடுத்து தமிழ் சினிமா மூலம் களமிறங்கியுள்ளார்.

அதாவது ஜான் பால்ராஜ் இயக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின்மூலம் திரையில் தோன்றவுள்ளார். இந்தப் படத்தில் பிக் பாஸ் லாஸ்லியா, நடிகர் அர்ஜுன் மற்றும் சதீஷ் நடிக்கின்றனர்.

பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு சகோ … ஹர்பஜன் சிங்கின் ட்வீட்!!

சில நாட்கள் இந்தப் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று சக நடிகர் சதீஷ் பிறந்தநாள் கொண்டாட, ஹர்பஜன் சிங் ட்விட்டரில் வாழ்த்துகளைக் கூறி இருக்கிறார்.

அதாவது, “ஒருத்தங்களை சிரிக்க வைக்கிறது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது, அப்படிப்பட்ட நகைச்சுவையின் மூலம் மக்களை எப்பஉம் சிரிக்க வெச்சு, மக்கள் மனசுக்கு நெருக்கமானவங்களா இருக்கறது பெரிய விஷயம்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு சகோ@actorsathish
மேலும் #Friendship படத்தில் உங்கள் சிரிப்பு மழையில் நினைய ரசிகனாக நானும் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார

From around the web