ஹன்சிகாவுடன் கைகோர்க்கும் ஜிப்ரான்

பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ படத்திற்கு பின்னர் வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருந்த ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்தும் உள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹன்சிகா நடித்த ‘போகன்’ மற்றும் ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக இருந்த ஜமீல் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் கதையை எழுதி முடித்ததும் இதில் உள்ள முக்கிய கேரக்டருக்கு ஹன்சிகாவை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்காது என்று தான் முடிவு செய்ததாகவும், இந்த
 
hansika
ஹன்சிகாவுடன் கைகோர்க்கும் ஜிப்ரான்
பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ படத்திற்கு பின்னர் வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருந்த ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்தும் உள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஹன்சிகா நடித்த ‘போகன்’ மற்றும் ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக இருந்த ஜமீல் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் கதையை எழுதி முடித்ததும் இதில் உள்ள முக்கிய கேரக்டருக்கு ஹன்சிகாவை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்காது என்று தான் முடிவு செய்ததாகவும், இந்த கதையை ஹன்சிகாவிடம் கூறியபின்னர் அவர் உடனே ஒப்புக்கொண்டதாகவும் ஜமில் தெரிவித்துள்ளார்.
ஹன்சிகாவுடன் கைகோர்க்கும் ஜிப்ரான்ஜோய்ஸ்டார் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இவர் ஹன்சிகா நடிக்கும் படத்திற்கு முதன்முதலில் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இம்மாத இறுதியில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
இந்த படம் ஹன்சிகாவுக்கு மீண்டும் கோலிவுட்டில் இடம் கிடைக்கும் வகையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web