பாட்டி மறைவு குறித்து ஜிவி பிரகாஷ் டுவீட்: வைரல் புகைப்படங்கள்

 

பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்கள் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஏ ஆர் ரஹ்மானின் தாயாரின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தங்களது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தனர் 

gv prakash

இந்த நிலையில் ஏஆர் ரஹ்மானின் தாயார் அவர்கள் ஜீவி பிரகாஷின் பாட்டி என்பதும் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தனது பாட்டியின் மறைவு குறித்து ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் நெகழ்ச்சியுடன் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் ராணி போன்ற அவர் இருப்பதை சுட்டிக்காட்டி அவர் என்றைக்குமே எங்கள் குடும்பத்தின் ராணிதான் என்று குறிப்பிட்டுள்ளார்

அதுமட்டுமின்றி ஏஆர் ரஹ்மான் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் உள்ள புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web