தனுஷ் படத்தின் ஓப்பனிங் பாடல் ரகசியத்தை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!

 

தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தனுஷ் 43’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது 

மேலும் இந்த படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பில் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் இந்த பாடலை தனுஷே பாடி இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

D43

’தனுஷ் 43’ படத்தின் ஓபனிங் பாடலாக வரும் இந்த பாடலுக்கு ஜானி என்பவர் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்றும் இந்த பாடலை விவேகா இயற்றி உள்ளார் என்றும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்

தனுஷ் படத்தில் இடம்பெறும் இந்த அட்டகாசமான ஓப்பனிங் சாங் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படும் என்று தான் நம்புவதாகவும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். பிரகாஷ் கொடுத்துள்ள இந்த சூப்பர் அப்டேட்டை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்


 

From around the web