முதல் முதலாக மகளின் புகைப்படத்தை பதிவு செய்த ஜிவி பிரகாஷ்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது இரு துறைகளும் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தலைவி மற்றும் சூரரைப்போற்று படங்களுக்கு இசை அமைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஜிவி பிரகாஷுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும் இந்த குழந்தைக்கு அன்வி’ என்று
 

முதல் முதலாக மகளின் புகைப்படத்தை பதிவு செய்த ஜிவி பிரகாஷ்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது இரு துறைகளும் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தலைவி மற்றும் சூரரைப்போற்று படங்களுக்கு இசை அமைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஜிவி பிரகாஷுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும் இந்த குழந்தைக்கு அன்வி’ என்று பெயரிடப்பட்டு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது
இந்த நிலையில் நேற்று முன்னணி பத்திரிக்கை ஒன்றில் ஜீவி பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் உள்ள புகைப்படம் அட்டைப் படமாக வெளிவந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது குழந்தை அன்வியின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். எங்கள் குடும்பத்தின் இளவரசி அன்வி என்று குறிப்பிட்டுள்ள ஜிவி பிரகாஷ், ஒரு பூக்கூடையில் குழந்தை இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web