அஜித், விஜய், சூர்யா படங்கள் குறித்து ஜிவி பிரகாஷ்

 

பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித் விஜய் சூர்யா படங்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் 

தான் முதன் முதலாக இசை அமைத்த திரைப்படம் வெயில் என்றும் அதற்கு அடுத்த படம் அஜித் நடித்த கிரீடம் படத்தில் தனக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறினார். அஜித் போன்ற பெரிய நடிகர்கள் தனது இரண்டாவது படத்திலேயே வாய்ப்பு கொடுத்தது மிகப்பெரிய விஷயம் என்றும் அந்த படத்தில் பாடல்கள் இப்போதும் ஹிட்டாகி உள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அஜீத் மனிதநேயம் உள்ளவர் என்றும் கூறியுள்ளார் 

மேலும் விஜய் மற்றும் வெற்றிமாறன் படம் குறித்து அவர் கூறுகையில் இந்த படம் கண்டிப்பாக உருவாகும் என்றும் ஆனால் எப்பொழுது என்பதை உறுதியாக கூறமுடியாது என்றும் அனேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2022 ஆம் ஆண்டு இந்த படம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார் மேலும் ’அண்ணா’ என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படம் குறித்து கூறிய ஜீவி பிரகாஷ் இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு வித்தியாசமான திரைப்படம் என்றும் சுதா கொங்கரா இந்த படத்தை மிக அபாரமாக இயக்கி உள்ளார் என்றும் இந்த படத்தின் அடுத்த மூன்று பாடல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

From around the web