30 ஆண்டுகால கொடுமையான சிறைவாசம் போதும் - ஜி.வி பிரகாஷ் குமார்

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என திரையுலக பிரமுகர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர் 

குறிப்பாக விஜய் சேதுபதி சற்றுமுன் இது குறித்த வீடியோவை வெளியிட்டு இருந்தார் என்பதைப் பார்த்தோம். அது மட்டுமின்றி பாரதிராஜா, விஜய் ஆண்டனி, பார்த்திபன், கார்த்திக் சுப்புராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இன்று தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் இதுகுறித்த பதிவுகளை பதிவு செய்துள்ளனர் 

gv prakash 1280

அந்த வகையில் சற்றுமுன் ஜிவி பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளம் மூலம் இதுகுறித்து கூறியதாவது: போதும் இந்த நீண்ட நெடிய சிறைவாசம். குற்றம் இழைக்காமலேயே 30 ஆண்டு காலம் மிகக் கொடுமையான சிறை வாசம் போதும் என தமிழினமே ஒன்றுபடு சொல்கிறோம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் அவர்கள் ஆவண செய்ய வேண்டும்’ என தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web