ஹாலிவுட் ஆல்பம் ரிலீஸ் தேதியை அறிவித்த ஜிவி பிரகாஷ்!

தமிழ் திரை உலகினர் வெகு சிலரே ஹாலிவுட்டுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன்முதலாக ஹாலிவுட்டில் காலடி வைக்கிறார். இவர் ஒரு ஆங்கில ஆல்பம் ஒன்றை தயார் செய்து வைத்திருப்பதாகவும் இந்த ஆல்பத்தில் பிரபல கனடா நாட்டின் பாடகி ஜூலியா அவர்கள் பாடி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் எனது முதல் ஆங்கில ஆல்பம் தயாராகி வருகிறது என்றும் என்னுடைய கனவு நனவாகி விட்டது என்றும்
 

ஹாலிவுட் ஆல்பம் ரிலீஸ் தேதியை அறிவித்த ஜிவி பிரகாஷ்!

தமிழ் திரை உலகினர் வெகு சிலரே ஹாலிவுட்டுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன்முதலாக ஹாலிவுட்டில் காலடி வைக்கிறார். இவர் ஒரு ஆங்கில ஆல்பம் ஒன்றை தயார் செய்து வைத்திருப்பதாகவும் இந்த ஆல்பத்தில் பிரபல கனடா நாட்டின் பாடகி ஜூலியா அவர்கள் பாடி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் எனது முதல் ஆங்கில ஆல்பம் தயாராகி வருகிறது என்றும் என்னுடைய கனவு நனவாகி விட்டது என்றும் கூறியுள்ளார். கோல்ட் நைட்ஸ்’ என்று டைட்டிலில் உருவாகி வரும் இந்த ஆல்பத்தில் பஸ்ட் சிங்கிள் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்றும் உங்கள் அனைவரின் ஆசியும் அன்பும் தேவை என்றும் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்வுகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்த ஆறு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளது என்பதும் ‘தலைவி’ உள்பட மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web